164597 பேர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர். நீங்களும் கையெழுத்திடுங்கள்!

பாராளுமன்றம் எமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளதால், நாங்கள் ஒரு பரந்த பிரச்சாரத்தை அமைத்து செயற்பட்டு வருகிறோம். நன்கொடை வழங்கி எமது பிரச்சாரத்திற்கு உதவுங்கள்

Nankotai

50 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்காக போராடினர் – இது ஒரு வரலாற்று வெற்றி. ஆனால் அதிகமான ஜனநாயகத்திற்கான நமது அர்ப்பணிப்பு இன்றும் தொடர வேண்டும். ஏனெனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இங்கு இன்னும் முடிவுகளை எடுக்க முடியவில்லை. அது அவர்கள் வைத்திருக்கும் வேறு நாட்டின் கடவுச்சீட்டுக்கள் என்பதனாலே சாத்தியமற்றுள்ளது. எனவே குறைந்தது ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அதற்கான நேரம் கனிந்துவந்துள்ளது!

இப்போது கையொப்பமிடுங்கள்!